க்ளாசிக் கார்ட்டூன்
கலெக்ஷன் ஸ்பெஷல்: எனது பார்வையில்…..
முதலில் சில சரி
செய்யப்படவேண்டிய விஷயங்கள் (இவற்றை சரி செய்யாவிட்டாலும் காமிக்ஸ் தொடர்ந்து வரும்,
நாமும் படிப்போம் தான். ஆனால், சரி செய்தால், நம்முடன் சேர்ந்து இன்னமும் சில பேர்
அதிகமாக படிப்பார்கள்).
பாக்ஸ் செட் என்ற
பாணி அறிமுகமானது நல்ல விஷயம். ஆனால் அவை வடிவமைக்கப்பட்ட விதம் தான் எனக்கு உறுத்தியது.
அவற்றில் எனக்கு மூன்று விஷயங்கள் உறுத்தியது.
1.
பாக்ஸ்
செட்டின் ஆக்கமும், வடிவமைப்பும் பட்டாசு பார்சலைப்போலவே இருந்தது. காமிக்ஸ் புத்தக
பெட்டி போல தெரியவே இல்லை (நம்ம சிவகாசி ஊர் ஸ்பெஷாலிடி என்று ஏதாவது Tribute செய்வதாக
இருந்தால், வேறு விஷயத்தில் செய்யுங்கள் சார், இதில் வேண்டாம்).
2.
பாக்ஸ்
செட்டின் அட்டையில் இருக்கும் 350 என்ற எண் வடிவமைக்கப்பட்ட விதம் அது 50 என்பதை உரக்க
கூறியது. ஆனால், 350 என்பதை தெரிந்துக்கொள்ள நிறைய நேரம் ஆனது.
3.
இந்த
க்ளாசிக் கார்ட்டூன் கலெக்ஷன் ஸ்பெஷல் இதழுக்கு பெயர் சூட்டும் போட்டியை (?!?!?!)
நீங்கள் இங்கே ப்ளாக்கில் அறிவித்த போது, அந்தப்பெயரை பரிந்துரைத்தவர் மேச்சேரி ரவி
கண்ணன் அவர்கள் (என்று நினைக்கிறேன்). அவரது பெயரை எங்கேயேணும் குறிப்பிட்டு இருக்கலாம்.
ஒருவேளை வேலைச்சுமையால் மறந்து இருந்தால், அடுத்து வரும் இதழில் இதனை சொல்வீர்கள் (3ன்று
நம்புகிறேன்).
இனிமேல்
கதைகளுக்கு வருவோம்.
1.
சிக்
பில் கதையான மாறிப்போன மாப்பிள்ளையை எனது நண்பருக்கு பரிசளித்து இருந்தேன். அவருக்கு
இந்த கதையை விவரிப்பதற்குள் எனக்கு நாக்கு தள்ளி விட்டது. May be, பின்னட்டையில் சிக்
பில் யார், ஷெரிப் யார் என்பதை விளக்கி இருந்தால், புதியவர்களுக்கு உதவியாக இருக்கும்.
நண்பர் கேட்ட முதல் கேள்வி, கதை எங்கே நடக்கிறது? என்பதை என்னைப்போன்ற புதியவர்கள்
எப்படி புரிந்துக் கொள்வது? ஷெரிப் என்றால் யார்? அல்லது என்ன? (7 நாட்களில் எமலோகம்
போல பின்னட்டையில் சிறு குறிப்பு அளித்திருக்கலாம்).
2.
அதே
சமயம், நமது காமிக்ஸை படிப்பவர்கள் 80 சதவீதம் பேர் பழைய ஆட்களே என்பதால், அவர்களுக்கு
இது உறுத்தலாக இருக்கலாம். ஆனால், புதிய வாசகர்களை நாடிச்செல்லும் இவ்வேளையில், இது
போன்ற விஷயங்களை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளலாமே?
3.
இதழின்
எடிட்டோரியலின் பின்னணியில் நீங்கள் 350 என்ற எண்ணை பெரிய சைசில் போட்டு இருப்பது,
அந்த பக்கங்களை படிக்கையில் மிகவும் உறுத்தியதோடில்லாமல், இடைஞ்சலாகவும் இருந்தது.
For a change, அடுத்து வரப்போகும் ஏதாவது ஒரு இதழின் ஹாட் லைனை / காமிக்ஸ் டைமை இது
போன்ற பின்னணி வேலைப்பாடுகள் இல்லாமல் கொடுத்துப் பாருங்களேன்?
4.
ஸ்மர்ஃப்
மற்றும் தாத்தா லியானார்டோவின் கதைகள் இரண்டுமே பொடியர்களுக்கு படிக்க, கதை சொல்ல அருமையாக
இருந்த்து. ஆகையால், இந்த பேக்கேஜில் சிக் பில் கதை தேவையா? என்ற ஒரு சந்தேகமும் எழுந்த்து.
ஆனால், வைப்பது ஒரே ஒரு சாம்பார் தான். அதில் மேலா எடுத்தால், ரசம். நடுவில் எடுத்தால்
சாம்பார். கீழே எடுத்தால், கூட்டு என்ற நிலைப்பாடில் அனைவரையும் மகிழ்விக்க நீங்கள்
செய்யும் முயற்சி என்பது புரிகிறது. இருந்தாலும், இவை தனியே பொடியர்களுக்கு என்றே வந்திருக்கலாம்.
சிக் பில் கதையைப்
பற்றி…
கதை மிகவும் வேகமாக
பயணித்தது. ஆனால், உறுதியாக இது பழைய சிக் பில் standardஇல் இல்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.
அதே சமயம், சமீப இதழ்களில் இதுவே நல்ல சிக்பில் கதை என்ற அளவிற்கு இது இருந்தது. சமீபத்தில்
பார்த்த ஐ படத்தின் கதையை ஒத்தே இது இருந்ததால், ஒரு கூடுதல் ஈர்ப்பும் இருந்தது.
கர்னல் க்ளிப்டன்
ஏழு நாட்களில் எமலோகம்:
முதலில் சில உறுத்திய
விஷயங்கள்:
மிகவும், சாதாரணமான
அடைப்படம். ஏகப்பட்ட சிகப்பு நிறம் மிகவும் உறுத்தியது. அதனால் தான் இதனை ஸ்மர்ப்ஸ்
மற்றும் லியானார்டோவுடன் சேர்த்திருக்க வேண்டாம். மனோதத்துவ நிப்ய்ணர்கள் கூறுவது என்ன
என்றால், சிவப்பு நிறம், அது சார்ந்தவற்றை சிறுவயதில் குழந்தைகளுக்கு அதிகமாக
expose செய்யக்கூடாது என்பதே. (அதனால் தான் ஸ்மர்ப்ஃஸ் டிசைனை நீங்கள் ஒரு லோகோ டிசைன்
செய்யும் நிறுவனத்திடம் ஆர்டர் செய்து, வாங்கியது என்னை உறுத்துகிறது. தவறான வண்ணக்கலவை).
கதை இரண்டு தளங்களுக்கு
இடையில் பேலன்ஸ் செய்தது போல இருக்கிறது (த்ரில்லர் + காமெடி). முடிவு? இது த்ரில்லராகவும்
இல்லை, காமெடியாகவும் இல்லை. 12ஆம் பக்கத்தில் இருப்பது போல பல இடங்களில் வண்ணக்கோர்வை
கண்ணை உறுத்தியது. Sharpness missing.
ஆனால், கதை படிக்க
விறுவிறுப்பாகச் சென்றது என்பதை மறுக்கவே முடியாது. நடு நடுவில் (மொக்கை கதையை) மெறுகேற்றியது
சில பல வசனங்கள். அதற்காகவே உங்களுக்கு ஒரு பாராட்டு. இந்தக் கதை நிச்சயமாக காமெடி
கர்னல் அள்விற்கு இல்லையென்றாலும், கண்டிப்பாக அடுத்த கதையை எதிர்நோக்க வைத்துவிட்டார்
கப் கேக் கர்னல்.
part 2... soon.