Thursday, 10 November 2016

No Comments: V 01

இது நம்ம லயன் காமிக்ஸ் இதழ் 44, டேஞ்சர் டையபாலிக்.

டிசம்பர் 1987ல வந்தது.


இப்போ பிரச்சனை என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்.

இது DC Comics Blue beetle, இதழ் 14.  ஜூலை 1987ல வந்தது.


Thursday, 16 June 2016

ஏனிந்த அவசரம்?

டியர் எடிட்டர், ஒரு சில கேள்விகள்:

1. ஏற்கனவே இந்த ஆண்டு ஏகப்பட்ட இதழ்கள். இதில் கணக்கில் வராமல் திடீரென்று முத்து மினி, கருப்பு வெள்ளையில் என் பெயர் டைகர் என்று extra additions வேறு. நிலைமை இப்படி இருக்க, இந்த ஆண்டே இந்த அப்சல்யூட் கிளாசிக்ஸ் கதைகளை வெளியிட்டே ஆகவேண்டிய அவசியம் என்ன?

2. அப்படி இந்த ஆண்டே வெளியிட்டே ஆக வேண்டும் என்றால், ஏன் இந்த Post 1995 கதைகள்? லக்கி லூக் கதைகளில் எவ்வளவோ உள்ளன. அப்படி இருக்க, மிகச் சமீபத்தில் நான் சிவகாசி வந்து (2013 ஃபெப்ரவரி) அங்கே விற்பனையாகாமல் இருந்த புத்தக செட்டுகளில் மீதம் இருந்தவற்றில் ஒன்றான கோச் வண்டியின் கதையை ஏன் இப்போது வெளியிட வேண்டும்? உண்மையான காரணம் ப்ளீஸ்.

3. இவையெல்லாம் கிளாசிக்குகள் என்றால், உண்மையிலேயே கிளாசிக்குகள் என்றால், ஏன் இவற்றை வெறும் 1000 பிரதிகளுக்கு மட்டுப்படுத்தி, அவசர அவசரமாக ஆகஸ்டில் announce செய்ய வேண்டும்? ஏதேனும் முன் தேதியிட்ட வேண்டுதலா என்ன? ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் அனைத்து இதழ்களிலும் விளம்பரப் படுத்தி. நிதானமாக அடுத்த ஆண்டு வெளியிட்டால் என்ன? அப்படி செய்தால், அவற்றுக்கான print run கூடுமல்லவா? மேலும், நிறைய பேரைச் சென்றடையுவும் செய்யும், உங்களுக்கும் அது சாதகமான விஷயம் அல்லவா?

4. இதுவரைக்கும் நீங்கள் வெளியிட்ட எந்த ஒரு (சந்தாவுக்குள் வராத) சிறப்பு வெளியீட்டிலும் காட்டாத அவசரத்தை ஏன் இதில் மட்டும் காட்டியாக வேண்டும்? அப்படி மூன்று மாதத்துக்குள்ளாக / ஆறு மாதத்துக்குள்ளாக வெளியிட்டாக வேண்டிய கட்டாயம் (Time limit based copyright கட்டாயம்) ஏதேனும் இருக்கிறதா என்ன?

5. எந்த ஒரு piracy rocket பற்றியும் உங்களுக்கு தகவல் தெரிவிக்கும் நண்பர்கள் இந்தியாவிலும், கடல் கடந்தும் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியும். Touch wood, இந்த ஆதரவு உங்களுக்கு தொடர ஏண்டும் என்று பிரார்தனை செய்கிறேன். ஆனால், அவர்களில் யாரேனும் இந்த குறிப்பிட்ட இதழ்கள் தான் இப்போது கள்ளச்சந்தையில் போகிறது என்று தகவல் அளித்தார்களா என்ன? ஏனென்றால், முத்து மினி இதழ்களை அவசர அவசரமாக வெளியிட இப்படி ஒரு காரணத்தைத்தான் சொன்ன்னீர்கள் (though that was a valid one, but ultimately wrong decision in the long run).

மேற்கண்ட எதற்கும் நீங்கள் பதில் அளிக்காமல் போகலாம். ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். நீங்கள் இப்படி வெறும் 1000 பிரிண்ட் ரன்னில் இந்த இதழ்களை வெளியிட்டால், அதுதான் உண்மையாக BLACK MARKETக்கு வழி வகுக்கும். மொத்தமே ஆயிரம் தான் அடிச்சாங்க, இனிமேல் அடிக்க மாட்டாங்க. அதனால், இதை வாங்குங்க என்று மிகவும் சுலபமாக கள்ளச்சந்தைக்கு நீங்களே வழி வகுத்துக் கொடுக்க வேண்டாமே, ப்ளீஸ்?

உங்களை முதல் முறையாக, மதுரை நண்பர்கள் மற்றும் திருச்சி நண்பர்களுடன் சந்தித்த போது உங்கள் அறையில் Iam the Boss  என்று எழுதி இருந்ததை பார்த்தேன். ஆனால், அதை சிலர் இப்போதும் சுட்டிக்காட்டுவதை விரும்பாத நீங்கள், முடிவு எடுத்து விட்டு, அதன் பின்னர் அதை forced decision choice ஆக, எங்களிடம் ஒப்படைப்பது ஏன்? ஹோட்டலில் இட்லி, தோசை மட்டும்தான் இருக்கிறது. என்ன வேண்டும் என்பது போல, இந்த குறுகிய options கொண்ட கேள்வி, எங்களை நீங்க்ள் ஏற்கனவே எடுத்த முடிவிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வது போல தோன்றுவது எனக்கு மட்டும்தானா? இதுதான் இயற்கையின் நியதியா? இந்தக் கேள்விக்கு விடையுண்டா? காலம் மௌனத்தின் பிரதிநிதியாக மாறாத சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாக இருக்கக் கூடுமா?
என்னுடைய கேள்விகளின் சாராம்சம் மிகவும் எளிமையானது: மூணு மாசமா ப்ளாகிலும், புக் வரும்போது எடிட்டோரியலிலும் வித்தியாசமான கதை என்று கதை விட்டுவிட்டு, வருடத்தின் முடிவில், ”படிக்கும்போதே அது சுமாரான கதைதான் என்று தோன்றியதுஎன்று பல மொக்கை கதைகளை 3000 பிரதிகளுக்கு மேல் அச்சிட்டு வரும் பிரிண்டர், ஏன் இந்த so called, கிளாசிக்குகளை மட்டும் அவசர அவசரமாக வெறும் 1000 பிரதிகள் மட்டும் அச்சிட வேண்டும்? அதன் பின்னணி என்ன?


உலகத்தின் புரிபடாத விஷயங்களின் நிழல்களின் பிம்பத்தில் தனி மனிதனின் கேள்விகளை நேர்க்கோட்டில் வைத்து பார்க்காமல், விளிம்புநிலை வாசகர்களின் பார்வையைப்போல அவதானிக்கும் உலகின் நிலை இதுதானோ? இந்த நிலை எப்போது மாறுமோ? இயற்கையின் இந்த கேல்விக்கு விடைதான் என்னவோ?

Thursday, 7 January 2016

நான் ஏன்யா நடுராத்திரில சுடுகாட்டுக்கு போகணும்?

ஒரு சின்ன ஆபரேஷன். அதனால், பல மாதம் இங்கே வர முடியவில்லை. ஆனால், இந்த பதிவைப்பார்த்ததும், கமெண்ட் போடாமல் இருக்கவே முடியவில்லை.

”நம்ம” காமிக்ஸ் 4 ஆல் தளத்தில் லக்கிலூக்கின் நைட்ரோ கிளிசரின் புத்தகம் (சினிபுக்) விலை: 700/-
அமேசான் தளத்தில்: 565/- (கேஷ் ஆன் டெலிவரியும் உண்டு, ஷிப்பிங் இலவசம்)இதுக்கு மகான் வடிவேலு பத்து வருஷத்துக்கு முன்னாடியே சொன்னது பொருந்தும்.

செப்பிடு வித்தை காட்டும் ஒருவர், வடிவேலுவிடம், “சார், இந்த தாயத்தை கட்டிக்கிட்டா, நீங்க நடு ராத்திரி 12 மணிக்கு கூட சுடுகாட்டுக்குப் போகலாம் சார்” என்று சொல்வார்.

மகான் வடிவேலு, “நான் ஏன்யா நடு ராத்திரில சுடுகாட்டுக்குப் போகணும்?” என்று திரும்ப கேட்பார்.

ஆகவே...........