Thursday 10 November 2016

No Comments: V 01

இது நம்ம லயன் காமிக்ஸ் இதழ் 44, டேஞ்சர் டையபாலிக்.

டிசம்பர் 1987ல வந்தது.


இப்போ பிரச்சனை என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்.

இது DC Comics Blue beetle, இதழ் 14.  ஜூலை 1987ல வந்தது.


Thursday 16 June 2016

ஏனிந்த அவசரம்?

டியர் எடிட்டர், ஒரு சில கேள்விகள்:

1. ஏற்கனவே இந்த ஆண்டு ஏகப்பட்ட இதழ்கள். இதில் கணக்கில் வராமல் திடீரென்று முத்து மினி, கருப்பு வெள்ளையில் என் பெயர் டைகர் என்று extra additions வேறு. நிலைமை இப்படி இருக்க, இந்த ஆண்டே இந்த அப்சல்யூட் கிளாசிக்ஸ் கதைகளை வெளியிட்டே ஆகவேண்டிய அவசியம் என்ன?

2. அப்படி இந்த ஆண்டே வெளியிட்டே ஆக வேண்டும் என்றால், ஏன் இந்த Post 1995 கதைகள்? லக்கி லூக் கதைகளில் எவ்வளவோ உள்ளன. அப்படி இருக்க, மிகச் சமீபத்தில் நான் சிவகாசி வந்து (2013 ஃபெப்ரவரி) அங்கே விற்பனையாகாமல் இருந்த புத்தக செட்டுகளில் மீதம் இருந்தவற்றில் ஒன்றான கோச் வண்டியின் கதையை ஏன் இப்போது வெளியிட வேண்டும்? உண்மையான காரணம் ப்ளீஸ்.

3. இவையெல்லாம் கிளாசிக்குகள் என்றால், உண்மையிலேயே கிளாசிக்குகள் என்றால், ஏன் இவற்றை வெறும் 1000 பிரதிகளுக்கு மட்டுப்படுத்தி, அவசர அவசரமாக ஆகஸ்டில் announce செய்ய வேண்டும்? ஏதேனும் முன் தேதியிட்ட வேண்டுதலா என்ன? ஜூலை முதல் ஒவ்வொரு மாதமும் அனைத்து இதழ்களிலும் விளம்பரப் படுத்தி. நிதானமாக அடுத்த ஆண்டு வெளியிட்டால் என்ன? அப்படி செய்தால், அவற்றுக்கான print run கூடுமல்லவா? மேலும், நிறைய பேரைச் சென்றடையுவும் செய்யும், உங்களுக்கும் அது சாதகமான விஷயம் அல்லவா?

4. இதுவரைக்கும் நீங்கள் வெளியிட்ட எந்த ஒரு (சந்தாவுக்குள் வராத) சிறப்பு வெளியீட்டிலும் காட்டாத அவசரத்தை ஏன் இதில் மட்டும் காட்டியாக வேண்டும்? அப்படி மூன்று மாதத்துக்குள்ளாக / ஆறு மாதத்துக்குள்ளாக வெளியிட்டாக வேண்டிய கட்டாயம் (Time limit based copyright கட்டாயம்) ஏதேனும் இருக்கிறதா என்ன?

5. எந்த ஒரு piracy rocket பற்றியும் உங்களுக்கு தகவல் தெரிவிக்கும் நண்பர்கள் இந்தியாவிலும், கடல் கடந்தும் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியும். Touch wood, இந்த ஆதரவு உங்களுக்கு தொடர ஏண்டும் என்று பிரார்தனை செய்கிறேன். ஆனால், அவர்களில் யாரேனும் இந்த குறிப்பிட்ட இதழ்கள் தான் இப்போது கள்ளச்சந்தையில் போகிறது என்று தகவல் அளித்தார்களா என்ன? ஏனென்றால், முத்து மினி இதழ்களை அவசர அவசரமாக வெளியிட இப்படி ஒரு காரணத்தைத்தான் சொன்ன்னீர்கள் (though that was a valid one, but ultimately wrong decision in the long run).

மேற்கண்ட எதற்கும் நீங்கள் பதில் அளிக்காமல் போகலாம். ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். நீங்கள் இப்படி வெறும் 1000 பிரிண்ட் ரன்னில் இந்த இதழ்களை வெளியிட்டால், அதுதான் உண்மையாக BLACK MARKETக்கு வழி வகுக்கும். மொத்தமே ஆயிரம் தான் அடிச்சாங்க, இனிமேல் அடிக்க மாட்டாங்க. அதனால், இதை வாங்குங்க என்று மிகவும் சுலபமாக கள்ளச்சந்தைக்கு நீங்களே வழி வகுத்துக் கொடுக்க வேண்டாமே, ப்ளீஸ்?

உங்களை முதல் முறையாக, மதுரை நண்பர்கள் மற்றும் திருச்சி நண்பர்களுடன் சந்தித்த போது உங்கள் அறையில் Iam the Boss  என்று எழுதி இருந்ததை பார்த்தேன். ஆனால், அதை சிலர் இப்போதும் சுட்டிக்காட்டுவதை விரும்பாத நீங்கள், முடிவு எடுத்து விட்டு, அதன் பின்னர் அதை forced decision choice ஆக, எங்களிடம் ஒப்படைப்பது ஏன்? ஹோட்டலில் இட்லி, தோசை மட்டும்தான் இருக்கிறது. என்ன வேண்டும் என்பது போல, இந்த குறுகிய options கொண்ட கேள்வி, எங்களை நீங்க்ள் ஏற்கனவே எடுத்த முடிவிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வது போல தோன்றுவது எனக்கு மட்டும்தானா? இதுதான் இயற்கையின் நியதியா? இந்தக் கேள்விக்கு விடையுண்டா? காலம் மௌனத்தின் பிரதிநிதியாக மாறாத சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாக இருக்கக் கூடுமா?
என்னுடைய கேள்விகளின் சாராம்சம் மிகவும் எளிமையானது: மூணு மாசமா ப்ளாகிலும், புக் வரும்போது எடிட்டோரியலிலும் வித்தியாசமான கதை என்று கதை விட்டுவிட்டு, வருடத்தின் முடிவில், ”படிக்கும்போதே அது சுமாரான கதைதான் என்று தோன்றியதுஎன்று பல மொக்கை கதைகளை 3000 பிரதிகளுக்கு மேல் அச்சிட்டு வரும் பிரிண்டர், ஏன் இந்த so called, கிளாசிக்குகளை மட்டும் அவசர அவசரமாக வெறும் 1000 பிரதிகள் மட்டும் அச்சிட வேண்டும்? அதன் பின்னணி என்ன?


உலகத்தின் புரிபடாத விஷயங்களின் நிழல்களின் பிம்பத்தில் தனி மனிதனின் கேள்விகளை நேர்க்கோட்டில் வைத்து பார்க்காமல், விளிம்புநிலை வாசகர்களின் பார்வையைப்போல அவதானிக்கும் உலகின் நிலை இதுதானோ? இந்த நிலை எப்போது மாறுமோ? இயற்கையின் இந்த கேல்விக்கு விடைதான் என்னவோ?

Thursday 7 January 2016

நான் ஏன்யா நடுராத்திரில சுடுகாட்டுக்கு போகணும்?

ஒரு சின்ன ஆபரேஷன். அதனால், பல மாதம் இங்கே வர முடியவில்லை. ஆனால், இந்த பதிவைப்பார்த்ததும், கமெண்ட் போடாமல் இருக்கவே முடியவில்லை.

”நம்ம” காமிக்ஸ் 4 ஆல் தளத்தில் லக்கிலூக்கின் நைட்ரோ கிளிசரின் புத்தகம் (சினிபுக்) விலை: 700/-




அமேசான் தளத்தில்: 565/- (கேஷ் ஆன் டெலிவரியும் உண்டு, ஷிப்பிங் இலவசம்)



இதுக்கு மகான் வடிவேலு பத்து வருஷத்துக்கு முன்னாடியே சொன்னது பொருந்தும்.

செப்பிடு வித்தை காட்டும் ஒருவர், வடிவேலுவிடம், “சார், இந்த தாயத்தை கட்டிக்கிட்டா, நீங்க நடு ராத்திரி 12 மணிக்கு கூட சுடுகாட்டுக்குப் போகலாம் சார்” என்று சொல்வார்.

மகான் வடிவேலு, “நான் ஏன்யா நடு ராத்திரில சுடுகாட்டுக்குப் போகணும்?” என்று திரும்ப கேட்பார்.

ஆகவே...........

Saturday 22 August 2015

க்ளாசிக் கார்ட்டூன் கலெக்ஷன் ஸ்பெஷல்: எனது பார்வையில் . . . 1

க்ளாசிக் கார்ட்டூன் கலெக்‌ஷன் ஸ்பெஷல்: எனது பார்வையில்…..

முதலில் சில சரி செய்யப்படவேண்டிய விஷயங்கள் (இவற்றை சரி செய்யாவிட்டாலும் காமிக்ஸ் தொடர்ந்து வரும், நாமும் படிப்போம் தான். ஆனால், சரி செய்தால், நம்முடன் சேர்ந்து இன்னமும் சில பேர் அதிகமாக படிப்பார்கள்).

பாக்ஸ் செட் என்ற பாணி அறிமுகமானது நல்ல விஷயம். ஆனால் அவை வடிவமைக்கப்பட்ட விதம் தான் எனக்கு உறுத்தியது. அவற்றில் எனக்கு மூன்று விஷயங்கள் உறுத்தியது.


1.   பாக்ஸ் செட்டின் ஆக்கமும், வடிவமைப்பும் பட்டாசு பார்சலைப்போலவே இருந்தது. காமிக்ஸ் புத்தக பெட்டி போல தெரியவே இல்லை (நம்ம சிவகாசி ஊர் ஸ்பெஷாலிடி என்று ஏதாவது Tribute செய்வதாக இருந்தால், வேறு விஷயத்தில் செய்யுங்கள் சார், இதில் வேண்டாம்).


2.   பாக்ஸ் செட்டின் அட்டையில் இருக்கும் 350 என்ற எண் வடிவமைக்கப்பட்ட விதம் அது 50 என்பதை உரக்க கூறியது. ஆனால், 350 என்பதை தெரிந்துக்கொள்ள நிறைய நேரம் ஆனது.

3.   இந்த க்ளாசிக் கார்ட்டூன் கலெக்‌ஷன் ஸ்பெஷல் இதழுக்கு பெயர் சூட்டும் போட்டியை (?!?!?!) நீங்கள் இங்கே ப்ளாக்கில் அறிவித்த போது, அந்தப்பெயரை பரிந்துரைத்தவர் மேச்சேரி ரவி கண்ணன் அவர்கள் (என்று நினைக்கிறேன்). அவரது பெயரை எங்கேயேணும் குறிப்பிட்டு இருக்கலாம். ஒருவேளை வேலைச்சுமையால் மறந்து இருந்தால், அடுத்து வரும் இதழில் இதனை சொல்வீர்கள் (3ன்று நம்புகிறேன்).

இனிமேல் கதைகளுக்கு வருவோம்.



1.   சிக் பில் கதையான மாறிப்போன மாப்பிள்ளையை எனது நண்பருக்கு பரிசளித்து இருந்தேன். அவருக்கு இந்த கதையை விவரிப்பதற்குள் எனக்கு நாக்கு தள்ளி விட்டது. May be, பின்னட்டையில் சிக் பில் யார், ஷெரிப் யார் என்பதை விளக்கி இருந்தால், புதியவர்களுக்கு உதவியாக இருக்கும். நண்பர் கேட்ட முதல் கேள்வி, கதை எங்கே நடக்கிறது? என்பதை என்னைப்போன்ற புதியவர்கள் எப்படி புரிந்துக் கொள்வது? ஷெரிப் என்றால் யார்? அல்லது என்ன? (7 நாட்களில் எமலோகம் போல பின்னட்டையில் சிறு குறிப்பு அளித்திருக்கலாம்).

2.   அதே சமயம், நமது காமிக்ஸை படிப்பவர்கள் 80 சதவீதம் பேர் பழைய ஆட்களே என்பதால், அவர்களுக்கு இது உறுத்தலாக இருக்கலாம். ஆனால், புதிய வாசகர்களை நாடிச்செல்லும் இவ்வேளையில், இது போன்ற விஷயங்களை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளலாமே?

3.   இதழின் எடிட்டோரியலின் பின்னணியில் நீங்கள் 350 என்ற எண்ணை பெரிய சைசில் போட்டு இருப்பது, அந்த பக்கங்களை படிக்கையில் மிகவும் உறுத்தியதோடில்லாமல், இடைஞ்சலாகவும் இருந்தது. For a change, அடுத்து வரப்போகும் ஏதாவது ஒரு இதழின் ஹாட் லைனை / காமிக்ஸ் டைமை இது போன்ற பின்னணி வேலைப்பாடுகள் இல்லாமல் கொடுத்துப் பாருங்களேன்?

4.   ஸ்மர்ஃப் மற்றும் தாத்தா லியானார்டோவின் கதைகள் இரண்டுமே பொடியர்களுக்கு படிக்க, கதை சொல்ல அருமையாக இருந்த்து. ஆகையால், இந்த பேக்கேஜில் சிக் பில் கதை தேவையா? என்ற ஒரு சந்தேகமும் எழுந்த்து. ஆனால், வைப்பது ஒரே ஒரு சாம்பார் தான். அதில் மேலா எடுத்தால், ரசம். நடுவில் எடுத்தால் சாம்பார். கீழே எடுத்தால், கூட்டு என்ற நிலைப்பாடில் அனைவரையும் மகிழ்விக்க நீங்கள் செய்யும் முயற்சி என்பது புரிகிறது. இருந்தாலும், இவை தனியே பொடியர்களுக்கு என்றே வந்திருக்கலாம்.

சிக் பில் கதையைப் பற்றி…


கதை மிகவும் வேகமாக பயணித்தது. ஆனால், உறுதியாக இது பழைய சிக் பில் standardஇல் இல்லை என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள். அதே சமயம், சமீப இதழ்களில் இதுவே நல்ல சிக்பில் கதை என்ற அளவிற்கு இது இருந்தது. சமீபத்தில் பார்த்த ஐ படத்தின் கதையை ஒத்தே இது இருந்ததால், ஒரு கூடுதல் ஈர்ப்பும் இருந்தது.


கர்னல் க்ளிப்டன் ஏழு நாட்களில் எமலோகம்:

முதலில் சில உறுத்திய விஷயங்கள்:

மிகவும், சாதாரணமான அடைப்படம். ஏகப்பட்ட சிகப்பு நிறம் மிகவும் உறுத்தியது. அதனால் தான் இதனை ஸ்மர்ப்ஸ் மற்றும் லியானார்டோவுடன் சேர்த்திருக்க வேண்டாம். மனோதத்துவ நிப்ய்ணர்கள் கூறுவது என்ன என்றால், சிவப்பு நிறம், அது சார்ந்தவற்றை சிறுவயதில் குழந்தைகளுக்கு அதிகமாக expose செய்யக்கூடாது என்பதே. (அதனால் தான் ஸ்மர்ப்ஃஸ் டிசைனை நீங்கள் ஒரு லோகோ டிசைன் செய்யும் நிறுவனத்திடம் ஆர்டர் செய்து, வாங்கியது என்னை உறுத்துகிறது. தவறான வண்ணக்கலவை).

கதை இரண்டு தளங்களுக்கு இடையில் பேலன்ஸ் செய்தது போல இருக்கிறது (த்ரில்லர் + காமெடி). முடிவு? இது த்ரில்லராகவும் இல்லை, காமெடியாகவும் இல்லை. 12ஆம் பக்கத்தில் இருப்பது போல பல இடங்களில் வண்ணக்கோர்வை கண்ணை உறுத்தியது. Sharpness missing.

ஆனால், கதை படிக்க விறுவிறுப்பாகச் சென்றது என்பதை மறுக்கவே முடியாது. நடு நடுவில் (மொக்கை கதையை) மெறுகேற்றியது சில பல வசனங்கள். அதற்காகவே உங்களுக்கு ஒரு பாராட்டு. இந்தக் கதை நிச்சயமாக காமெடி கர்னல் அள்விற்கு இல்லையென்றாலும், கண்டிப்பாக அடுத்த கதையை எதிர்நோக்க வைத்துவிட்டார் கப் கேக் கர்னல்.

part 2... soon.


Sunday 28 June 2015

கருத்து சுதந்திரம், My foot.

நேற்று லயன் காமிக்ஸ் எடிட்டரின் வலைதளத்தில் ஒரு மூன்று கமெண்ட் போட்டு இருந்தேன்.  (தப்பு தான், இருந்தாலும் என்ன செய்வது? மூன்று வருடங்களுக்கு முன்பாக அவரை பெங்களூரு காமிக் கானில் முதல் முறையாக சந்தித்தப் போது, அவரிடம் கேட்ட ஒரு கேள்விக்கு இப்போது பதில் அளித்ததால் வந்த விளைவு இது).

அதாவது, காமெடி கர்னல் பற்றிய பதிவு என்பதால் ஆர்வம் மேலிட கமெண்ட் போட்டு இருந்தேன். இதோ அந்த கமெண்ட்டுகள் கொண்ட ஸ்க்ரீன் ஷாட்.


அதில் இரண்டாவது கமெண்ட் பற்றியதே இந்த பதிவு.

அதாவது, இரண்டாவது கமெண்ட்டில் ஒரு லின்க் கொடுத்து இருந்தேன். கோவையை சேர்ந்த ஒரு காமிக்ஸ் நண்பரின் கை வண்ணத்தில் வெளிவந்த ஸ்கான்லேஷன் புத்தகங்களின் ஆன்லைன் லின்க் தான் அது.

==============================================
யாரோ ஒரு புண்ணியவான் காமெடி கர்னல் கதைகளை தமிழில், ஆன்லைனில் வெளியிட்டு இருக்கிறார்.

இதோ லின்க்: மை டியர் வில்கின்சன்

இதே தளத்தில் இன்னமும் சில கதைகளை இவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த லின்க்கை இங்கே அளிப்பது சட்டப்படி சரியா? என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.
 ===============================================

இந்தக் கமெண்ட் இன்று காலையில் “எப்படியோ” காணாமல் போய் விட்டது. காரணம் என்ன என்பதும் சொல்லப்படவில்லை. நம்ம எடிட்டர் நண்பர் இருவருக்கு மின்னஞ்சலில் சொன்னது போல, காயம் என்பது ஒரு வழிப்பாதை அல்லவே?

இந்தாருங்கள், அந்த டெலீட்டட் கமெண்டுக்கான ஸ்க்ரீன்ஷாட்.


 டெக்னிகலி, அது அவரோட ப்ளாக், ஆகையால நாம் எந்த கேள்வியும் கேட்க முடியாது. ஆனால், இந்த கருத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு யாராவது இனிமே என் கிட்டே வந்தீங்க, நடக்கிறதே வேற, சொல்லிப்புட்டேன். ஜாக்கிரதை.

பின் குறிப்பு : அந்த டெலீட் செய்யப்பட்ட லின்க் மேலே என்னுடைய கமெண்ட்டில் இருக்கிறது. படித்து மகிழவும்.




Tuesday 23 June 2015

No Comments: Lion comics number 1

Dear friends,

Have a look at the first page of the first ever Lion comics.

Just read the page completely.

For those who came in late, Here are the Bloopers:

1. modesty & willie garvin worked together in the intelligence agency run by tarrant?????

2. Sir gerald tarrant has become TYRANT.

3. Above all, the crime syndicate ran by modesty blaise (network) has become England's Intelligence network.

This is just a sample page. planning to read the entire book and come back on this.

Cheers, tamil comics.

Cheers, Translation.

Cheers, sticking to the original story line.

Monday 9 March 2015

எங்க ஊரு பாட்டுக்காரன்!!!

இது ஒரிஜினல்.........



இது மொழிபெயர்ப்பு...... ஃப்பூ!!!


ஒருமுறை இரண்டு பாடல்களையும் படித்து பாருங்கள்.

ஒரிஜினலுக்கும் மொழிபெயர்ப்புக்கும் ஸ்நானப்பிராப்தி என்று சொல்வார்களே, அதாவது இருக்கிறதா?

நல்லவேளை, சாக்ரடீஸ் இந்த புத்தகத்தை இன்னமும் படிக்கவில்லை.