Monday, 9 March 2015

எங்க ஊரு பாட்டுக்காரன்!!!

இது ஒரிஜினல்.........இது மொழிபெயர்ப்பு...... ஃப்பூ!!!


ஒருமுறை இரண்டு பாடல்களையும் படித்து பாருங்கள்.

ஒரிஜினலுக்கும் மொழிபெயர்ப்புக்கும் ஸ்நானப்பிராப்தி என்று சொல்வார்களே, அதாவது இருக்கிறதா?

நல்லவேளை, சாக்ரடீஸ் இந்த புத்தகத்தை இன்னமும் படிக்கவில்லை.

8 comments:

 1. அருண் அவர்களுக்கு,

  வணக்கம். உங்களது சமீப பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நாணயத்துக்கு மூன்று பக்கங்கள் என்பதை உணர்த்தும் வகையில் சமீப காலமாக நீங்கள் தொடர்ந்து உங்களது விமர்சனத்தை குறைகளை மட்டுமே சுட்டிக்காட்ட ஆரம்பித்து உள்ளது ஒரு வகையில் நல்லதே.

  ஆனால், இந்த நேரத்தில் நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். விமர்சனம் என்பது மிகவும் கூரான முனையைக்கொண்ட ஒரு ஆயுதம். ஒருமுறை அதனை நீங்கள் எடுத்துவிட்டால், அதன்பிறகு .....

  1. நீங்கள் மிகவும் கூர்மையாக கவனிக்கப்படுவீர்கள்.

  2. உங்களது தவறுகளுக்காக அனைவரும் காத்து இருப்பார்கள். ஒரு தவறு, ஒரே ஒரு தவறு செய்தாலும் கூட உங்களது அனைத்து பழைய விமர்சனங்களின் நேர்மையும் சந்தேகிக்கப்படும்.

  3. நட்பு வட்டத்தில் நிறைய மாறுதல்கள் நிகழும்.

  இனி இந்த பதிவுக்கு வருவோம்.

  முதல் விஷயம்: இந்த கதை இதுவரையில் ஆங்கிலத்தில் வரவில்லை. எனவே நீங்கள் இந்த கதையின் பக்கங்களை எடுத்து டச் செய்து, ஆங்கிலத்தில் டைப் செய்து இருக்கிறீர்கள் என்பதை மூன்றாவது கட்டத்தை பார்த்த உடனே அவதானிக்க முடிகிறது.

  இரண்டாவது விஷயம்: அப்படி இருக்க, நீங்களே வேறு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்து இருப்பது உறுதியாகிறது.

  மூன்றாவது விஷயம்: எடிட்டரின் இத்தாலி - தமிழ் மொழி பெயர்ப்பு குறை கொண்டது என கூறும் நீங்கள் வெளியிட்டுள்ள இந்த பதிவில் உங்களது வேற்று மொழி - ஆங்கில மொழி பெயர்ப்பே தவறாக இருக்கிறதே?

  ஏனென்றால், இந்த பாடலை பற்றி கூகிளாண்டவரிடம் சிறிது உதவியை கேட்டு இருந்தால், அவர் இந்த பாடலை எழுதியது ரை கூடர் என்பதும், இந்த பாடல் வரிகள் மூன்றாவது பத்தியில் வரும் என்பதும் தெரிந்து இருக்கலாம். இதோ அந்த வரிகள்:

  The river flows on like a breath
  In between our life and death
  Tell me who's the next to cross the borderline

  இது நீங்கள் ”மொழி பெயர்த்த” வரிகள்
  The river flows on like a breath
  separating Our life & death
  Tell me who will be the next to go beyond the border line

  நீங்கள் “கண்டுபிடித்ததைப்போலவே” நாங்களும் இதில் குற்றம் சொல்லலாம் அல்லவா?
  முதல் வரி - இது புத்தகத்திலேயே இருந்தது, எனவே தவறேதும் இல்லை.

  இரண்டாவது வரியில் Seprating என்பதற்கும் In between என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

  அதைப்போலவே மூன்றாவது வரியில் To go beyond என்பதற்கும் Cross என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

  கவனம், அருண். நமது So called எதிரிகள் என்ன ஆயுதம் ஏந்துகிறார்கள் என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும்.

  பின் குறிப்பு: முழுமையான பாடல் வரிகளை படிக்க: பாடல் வரிகள்

  ReplyDelete

 2. மொழி பெயர்ப்புனா ஆங்கிலத்துல இருக்கத அப்படியே தமிழுக்கு தருவதல்ல தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி தருவதே.இது கொஞ்சம் கஷ்டமான பனி கூட.ஏனெனில் ஓவரா மாத்துனா மூலத்தின் சுவை குன்றிவிடும்.ஆங்கிலத்தை அப்படியே தமிழுக்கு மாற்றினால் படிப்பவனுக்கு பைத்தியம் பிடித்து விடும்..!

  ReplyDelete
 3. அருண் ! உங்கள் எழுத்தில் உள்நோக்கம் ஏதும் இல்லை என மனப்பூர்வமாக நம்புகிறேன் ..

  மொழி பெயர்ப்பு சற்று சிரமமான பணி ..ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பம்சங்கள் இருக்கலாம் ..
  தவிர பிராந்திய மொழி வாசகர்களுக்கு ஏற்றவாறு சற்று கூட குறைய இருப்பதில் என்ன கெட்டு விட போகிறது ...
  இது நீங்கள் பௌன்ஸர் பேனல் போட்ட போதே எழுத நினைத்தது ..

  ReplyDelete
 4. Dear arun

  Blog. எனும் ஆங்கில சொல்லிற்கு
  தமிழில் "வலைப்பூ" என்று சொல்ல காரணம் நல் வாசனை வீச வேண்டும் என்பதற்கே ,
  ஆனால் இங்கு" நரகல் " வாசம் வீசுவது ஏனோ.

  ReplyDelete
 5. கிறுக்கன்,

  ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. அதற்கு பெயர் projection Imaging. இதற்கு என்ன விளக்கம் என்றால், தான் எப்படிப்பட்ட எண்ணங்களை கொண்டு இருக்கிறோமோ, அதையே கண்ணாடியாக கொண்டு சமூகத்தை பார்ப்பது. (தமிழில் காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று சொல்வதில்லையா, அப்படி).

  உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்லி விளக்குகிறேன். ஆண்மையற்ற ஒருவனுக்கு, பார்ப்பவர்கள் எல்லாமே அவனைப்போலவே ஆண்மையற்றவர்களாகவே தெரிவார்கள். ஏனென்றால் அவன் சமூகத்தை, தன்னை பற்றிய கண்ணாடி அணிந்தே பார்க்கிறான்.

  ஆகவே, இங்கு ”உங்கள்” வாசனை வீசுவதாக உங்களுக்கு தோன்றினால் அதில் எனக்கு வியப்பேதும் இல்லையே?

  ReplyDelete
 6. ஷல்லூம் ..அருமையான கவிதைகள் எழுதும் இனிய நண்பர் நீங்கள் ..மற்றவர்கள் ப்ளாக் -ல் எழுதும்போது உங்கள் அபிப்பிராயம்தனை மென்மையாக கூறலாமே ....அருண் காமிக்ஸ் பொறுத்தவரை ஒரு ப்ளாக்கர் என்பதை விட சக வாசிப்பாளர் என்ற கண்ணோட்டம்தனில் பார்க்கலாமே ..
  விவாதம் செய்யலாம் ..மன கசப்பு தோன்றாதவாறு

  இது என் வேண்டுகோள் ....

  அருண் ..நீங்கள் விஷய ஞானம் நிறைய உள்ளவர்
  வார்த்தை உபயோகத்தில் உணர்ச்சி வசப்படாது பதில் அளிக்க உங்களால் கண்டிப்பாக முடியும் ..

  உங்களுக்கும் இது எனது வேண்டுகோள் ..

  ReplyDelete
  Replies
  1. செல்வம் அபிராமி,

   என்னை பொருத்தவரையில் எனக்கு என்ன தோன்றியதோ, அதையே நான் பதித்து வருகிறேன். என்னுடைய கருத்துக்களை யார் மீதும் திணிக்க வில்லை, யாரையுமே இங்கு வரச்சொல்லி விளம்பரம் கொடுத்து அழைக்கவில்லை.

   அப்படி இருக்க, இங்கே வந்து அவையடக்கம் இன்றி கருத்து சொன்னால் எப்படி என்னால் வாளாவிருக்க இயலும்? இந்த கிறுக்கனை பற்றி ஏற்கனவே பலர் சொல்லக்கேள்விப்பட்டு இருக்கிறேன். இருந்தாலும் இங்கே அவர் சொன்ன கருத்துக்கு பதில் மட்டும்தானே அளித்து இருக்கிறேன்.

   என்னை பொருத்தவரையில் இந்த சமூகமும், மனிதர்களும் கண்ணாடியை போலவே. நீங்கள் எதை முன்நிறுத்துகிறீர்களோ, அதுவே பிரதிபலிக்கும்.

   நிச்சயமாக நான் உணர்ச்சி வசப்பட்டு இதை எழுதவில்லை. நிதானமாகவே பதிவிடுகிறேன்.

   புரிதலுக்கு நன்றி.

   Delete
 7. Arun Sowmy,

  Glad to see that you understood much about the QUALITY of TAMIL COMICS sooner than later :-)

  Inasmuch as Editor Vijayan deserves kudos for introducing new Genres - the crappy quality of translation and shoddy printing will stand the test of time :-)

  As for Tamil Comics fans like those who have commented here ... they are quite like TASMAC fans :-) Awesome hero-worshippers :-) :-)

  Hope now you understand what Rafiq, me and some good intentioned members are trying to do at the blog - if not hint at improving translation quality any more (which is now hopeless) at least try to hint good stories :-)

  Comic Lover

  ReplyDelete