Monday 9 June 2014

பரணி ஃப்ரம் பெங்களூருவின் குறைகள் (அதாவது அவர் கண்டுபிடித்த குறைகள்0

 நண்பர் பரணி எடிட்டர் விஜயன் அவர்களின் ப்ளாக்கில் எழுதிய கமெண்ட்:


ஒருவரை பற்றி குறை கூறும்போது / குற்றம் சாட்டும்போது அந்த குறையோ / குற்றமோ உண்மையானதுதானா? நாம் சொல்வது சரிதானா? என்று ஒருமுறைக்கு இருமுறை சரியாக செக் செய்தபின்னரே பொதுவில் அவற்றை வைக்கவேண்டும்.

ஆனால் நண்பர் பரணி (ஃப்ரம் பெங்களூரு) இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதே இல்லை. அவர்பாட்டுக்கு ஏதோ என் புருஷனும் சண்டைக்கு போனான் என்பதைப்போல இந்த கதையின் ஒரிஜினலில் இதே போல இருக்கிறதா இல்லை நம்ம எடிட்டர்தான் தவறாக ப்ரிண்ட் செய்துவிட்டாரா? என்றெல்லாம் கொஞ்சம் கூட யொசிக்கவே இல்லை.

உடனடியாக அவரை குற்றவாளி கூண்டில் ஏற்றி விட்டார். அடுக்கு மொழியில் அடுத்தடுத்த பதிவுகளில் இவர் ப்ரிண்டிங் சரி இல்லை, ப்ரிண்டிங் சரி இல்லை என்று சொல்லிகொண்டே வந்தார். 

ஆனால் எந்த இடத்தில் இது சரி இல்லை என்பதை அவர் சொல்வதே இல்லை. பொத்தாம் பொதுவாக அச்சுத்தரம் சரி இல்லை, அச்சுத்தரம் சரி இல்லை என்பதே இவருடைய கமெண்ட் ஆக இருக்கும். இதைப்பார்த்த என்னுடைய அலுவலக நண்பர் “ என்னப்பா, உங்க காமிக்ஸ் எடிட்டர், தப்பும் தவருமாக ப்ரிண்ட் செய்கிறாரா?” என்றெல்லம் என்னை கிண்டல் செய்தார்.

அந்த கடுப்பில் நேற்று இரவு பரணி (ஃப்ரம் பெங்களூரு) சாரிடம் (கொஞ்சம் சூடாகவே) ஒரு கேள்வி கேட்டேன். அதாவது குறிப்பாக எந்தெந்த இடங்களில் ப்ரிண்டிங் சரி இல்லை என்பதை சொல்லுங்கள் என்று.

(பஸ்சில் இருந்து இறங்கிய) பரணி (ஃப்ரம் பெங்களூரு) சார் உடனே இந்த கமெண்ட்டை இட்டார்.


//லார்கோ கதையில் அச்சில் நான் குறை என நினைப்பது, நண்பர்கள் பார்வைக்கும் நமது ஆசிரியர் கவனத்திற்கும்

பக்கம்-52 
1. வரிசை 1 படம் 1
ஜன்னல் அருகே தெரியும் செடியில் நீளவாக்கில் முட்டை வடிவில் வண்ணத்தில் தெரியும் வித்தியாசம் (அந்த இடம் மட்டும் வெளீர் பச்சை நிறத்தில் தெரிவதை கவனிக்கவும்)
2. வரிசை-2 படம்-1
லார்கோ அருகே உள்ள நண்பரின் கோட்டில் கை பகுதியில் தெரியும் நீள் முட்டை வடிவில் தெரியும் வண்ண மாற்றம்.
3. வரிசை-3 படம்-1
நீரின் நடுவில் நீள் முட்டை வடிவில் தெரியும் வண்ண மாற்றம், அந்த இடம் மற்றும் கிளி பச்சை நிறத்தில் தெரிகிறது. 

பக்கம்-52
4.வரிசை-3 படம்-2
லார்கோவின் இடுப்பு பகுதியில் (இடை பெல்ட் அருகே) பாத்-டப் கலரில் தெரிவதை கவனிக்கவும்.

பக்கம்-64
5.வரிசை-1 படம்-1
இன்ஸ்பெக்டர் முதுகில் தெரியும் வண்ண மாற்றம்.
6.வரிசை-1 படம்-2
உயர் போலீஸ் அதிகாரியின் பின் பக்க கோர்ட்டில் நடுவில் தெரியும் திரைசேலையின் வண்ணம்.
7.வரிசை-2 படம்-1
லார்கோ முடியின் பின் பகுதியில், பின்னால் உள்ள ஜன்னலின் மர சட்டத்தின் கலரை தெரிகிறது. 
இந்த பக்கத்தில் (64-65) மேலும் பல இடம்களில் வண்ணம்கள் சிதறி உள்ளதை பார்க்கலாம். 

பக்கம்-68
8.வரிசை-2 படம்-1
லார்கோ அமர்ந்து இருக்கும் நாற்காலின் பின்புறம் இரண்டு வண்ணத்தில் தெரிவதை பார்க்கலாம். 
9.வரிசை-3 படம்-2
குஸ்தாவ் கோர்டின் தோள்பட்டை வரை ஒரு கலரும் கீழ் பகுதி வேறு வண்ணத்தில் தெரிவதை காணலாம்.

இதனை பற்றி மேலும் இங்கு வாதிட விரும்பவில்லை. //


இதில் இருக்கும் எல்லா கட்டங்களையும் பொறுமையாக சோதித்து விட்டேன்.

அதாவது சினிபுக் இதழில் இருக்கும் பக்கங்கள் + நமது லயன் காமிக்ஸ் இதழிலிருக்கும் பக்கங்கள் (என்னுடைய செல்போனில் எடுக்கப்பட்ட படங்கள், ஸ்கான்னர் இல்லை, மன்னிக்கவும்) இரண்டையும் அருகில் வைத்துக்கொண்டு.

எல்லா படங்களையும் இடாமல் இரண்டே இரண்டு படங்களை மற்றும் இங்கே  

பக்கம்-64
5.வரிசை-1 படம்-1
இன்ஸ்பெக்டர் முதுகில் தெரியும் வண்ண மாற்றம்.





பக்கம்-68
9.வரிசை-3 படம்-2
குஸ்தாவ் கோர்டின் தோள்பட்டை வரை ஒரு கலரும் கீழ் பகுதி வேறு வண்ணத்தில் தெரிவதை காணலாம்.




இதுதான் பரணி (ஃப்ரம் பெங்களூரு) சாரின் “கண்டுபிடிப்புகள்”.

வாழ்துக்கள் பரணி (ஃப்ரம் ப்ரம் பெங்களூரு) சார்.

//இதனை பற்றி மேலும் இங்கு வாதிட விரும்பவில்லை. //

அதுசரி.

3 comments:

  1. நண்பர் பரணி (ஃப்ரம் பெங்களூரு) பொதுவில் இப்படி எல்லாம் எழுதுவதற்க்கு என்னை மன்னிக்கவும். இருந்தாலும் இது இங்கே பதிவிடல் அவசியம்.

    ஏனென்றால் உங்கள் கருத்தை படிக்கும் என்னைபோன்ற மௌன பார்வையாளர்கள் 30 வருடங்களாக அச்சுத்துறையில் இருக்கும் எடிட்டர்தான் எதோ தவறாக அச்சிடுவதாகவும், உங்களைப்போன்ற “எக்ஸ்பெர்ட்கள்” என்னதான் எடுத்து சொன்னாலும் அதை சரி செய்யாத “திமிர்” பிடித்தவராகவும் தெரிகிறார்.

    ஆனால் உண்மை என்ன? ஒரிஜினல் கதையில் எப்படி வண்ணம் இருக்கிறதோ அப்படித்தானே ப்ரிண்ட் செய்ய முடியும்? அதைத்தானே எடிட்டர் செய்கிறார்? அது எப்படி தவறாகும்?

    ReplyDelete
  2. 64 ஆம் பக்கதில் குறை இல்லசார்,, ஆனா 68 ஆம் பக்கத்தில் சட்டை நிழல் மட்டும் ஒரிசினலில் கரு நீலமாவும் நமதில் நீலம் குறைந்து செந்நிரம் அதிகமாகிவிட்டது, பெரிய பிழையல்ல ஆனா யாராவது இதை சுட்டுவதும் தப்பில்லையே... நீங்க ஏன் டென்சனாவரீங்க

    ReplyDelete
  3. http://postimg.org/image/z3a5imhsx/
    http://postimg.org/image/yk3ondgt9/

    நண்பரே.. இரத்தத் தடம் இதழுக்கு முன் வந்த இதழ்களை தயவு செய்து பாருங்கள். அதன் ப்ரிண்டிங் தரத்தை. முக்கியமாக எமனின் திசை மேற்கு என் பெயர் லார்கோ. அந்த இதழ்களைப் பார்த்து, படித்து பாராட்டி எடிட்டர் ப்ளாக்கில் எழுதியிருக்கிறேன். தற்போது நிறைய ப்ரிண்டிங் குறைபாடுகள் இருப்பது வருந்தத் தக்ககது.

    ReplyDelete